இன்றைய தென்னிலங்கையின் பதட்டங்களை கருத்தில் கொண்டு, வடக்கு – கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியமில்லை என்று அரசாங்கம் கருதினால், கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் (மதத்தால் இந்துக்களும் கிறிஸ்தவர்களும்) தங்களது அரசியல் பொருளாதார விவகாரங்களை தனித்துவமாக கையாளும் வகையிலான தனியான நிர்வாக அலகு அவசியம் என்பதை நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.
புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த, ஒரு தனி அலகு என்னும் அடிப்படையில் ‘சமஷ்டி’ கட்டமைப்பின் கீழ் அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் என்று, சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனம், யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. நிறுவனத்தின் சார்பில், அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா யோசனையைச் சமர்ப்பித்திருந்தார்.
புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளைப் பெற்று வரும் குழுவின் அமர்வு திருகோணமலையில் இடம்பெற்ற போது, சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தின் சார்பில், அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா யோசனையைச் சமர்ப்பித்திருந்தார். கிழக்கின் தமிழ் பகுதிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் அந்த நிர்வாக அலகு அமைய முடியும். வடக்கு கிழக்கை இணைத்தால் முஸ்லிம்களுக்கான தனியானதோர் அலகு தொடர்பில் சிந்திக்க முடியும் என்றால், அது இணைக்கப்படாது விட்டால் கிழக்கு வாழ் தமிழர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அவர்களுக்கான ஒரு தனியானதொரு நிர்வாக அலகு தொடர்பில் ஏன் சிந்திக்க முடியாது? இவ்வாறானதொரு கோரிக்கையை கடந்த கால அனுபவங்களிலிருந்தும் நியாயமான அச்சங்களிலிருந்துமே முன்வைக்கப்படுகிறது.
கிழக்கில் தமிழ் மக்கள் ஒரே நேரத்தில் இரண்டு சமூகங்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்த இரண்டு சமூகங்களில் ஏதோ ஒன்றுடன் இணைவதால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போகிறது. ஓர் இனத்தைச் சார்ந்து இன்னொரு சமூகத்தின் சமூக பொருளதார வாழ்வு இருக்க முடியாது. இரண்டும் தனித்துவங்களோடும் சம அதிகாரத்தோடும் இணைந்து பணியாற்றுவது என்பது வேறு ஆனால் தனித்துவத்தை கைவிட்டு செயலாற்றுவது என்பது வேறு.
எனவே கிழக்கின் யதார்த்தத்தை கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கான தனியான ஒரு நிர்வாக அலகு அவசியம் என்பதை நாங்கள் இங்கு அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றோம். இதன் மூலம்தான் கிழக்கு தமிழ் மக்களின் அச்சத்தை போக்க முடியும். கிழக்கு தமிழ் மக்களின் நியாயமான அச்சத்தை போக்கும் வகையிலான ஏற்பாடுகளை புதிய அரசியல் யாப்பு உள்ளடக்கவில்லையாயின் அது நல்லிணக்கம் நோக்கிய பயணத்தில் ஒரு பின்னடைவாகவே அமைய முடியும்.
-jaffnamuslim
0 கருத்துகள்:
Post a Comment