26 வருடங்கள் பின்னடைவை சந்தித்த புத்தளம் நகரை சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் எம்.எச்.எம். நவவி அவர்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்கி கௌரவபடுத்திய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலமாக்களும், புத்தி ஜீவிகளும், பொது மக்களும் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் 09 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் பல நிறுவனங்களில் உயர் பதவிகளில் தவிசாளர்களை நியமித்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு மாவட்டங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் புத்தளம் மண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கோருவது எவ்வகையிலும் நியாயமில்லை. அதனை பாதுகாப்பது எமது உரிமையாகவும் உள்ளது. அன்று வடக்கிலிருந்து விடுதலை புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களை ஆதரித்து வரவேற்றது புத்தளம் நகர மக்கள். அத்தகைய முஸ்லிம் மக்களுக்கும், அவர்களுக்கு புகலிடம் வழங்கிய புத்தளம் மண்ணுக்கும் கௌரவம் அளித்தே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் இந்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை நவவி அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
புத்தளம் மக்களாகிய நாம் அவருக்கு என்றுமே நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
1989 ம் ஆண்டு பொது தேர்தலில் புத்தளம் நகருக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்க இருந்த போதும் 750 வாக்குகளினால் நவவி அவர்களும் 2500 வாக்குகளினால் மர்ஹூம் ஹாபி அவர்களும் தோல்வி அடைந்தனர். இதனை ஈடு செய்யும் பொருட்டே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கே.ஏ. பாயிஸ் அவர்களுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கியது. ஐ.தே.கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக அன்று கடமையாற்றிய மர்ஹூம் பிஸ்ருல் ஹாபி அவர்கள் அன்று பலத்த ஏமாற்றங்களுக்கு மத்தியில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அதே போல இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களும் முன்னைய அரசினால் ஏமாற்றப்பட்டுள்ளார். இறுதியாக நடைபெற்ற தேர்தலிலும் எம்.என்.எம். நஸ்மி 33 ஆயிரம் வாக்குகளை பெற்றும் பாராளுமன்றம் செல்ல முடியாமல் போனது. இந்த நிலையில் 26 வருடங்கள் பின்தங்கிய நமது நகருக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் துணிந்து இந்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கியுள்ளார்.
கல்வியிலே, சுகாதார துறையிலே என அத்தனை அபிவிருத்திகளையும் புத்தளம் நகரம் தொடர்ந்து காண வேண்டுமானால் கிடைத்த இந்த பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாப்பது காலத்தின் தேவையாக உள்ளது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு தமது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment