முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு நாட்டின் ஜனாதிபதி பதவியைக் கூட வழங்கினாலும் அவரால் ஒன்றுமே செய்ய முடியாது என்று அக்கரைப்பற்றில் ஒரு கதை எப்போதுமே பேசப்பட்டு வருகின்றது.அது உண்மை என்று உணர்த்தும் வகையில் அமைச்சர் தயா கமகேயின் அரசியல் நடவடிக்கை அமைந்துள்ளது.
மஹிந்த ஆட்சியில் முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் நிர்வாகிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைமைப் பொறுப்பு இப்போது பெரும்பான்மை சமூகத்தினரின் கையில் போய்விட்டது.
புதிய ஆட்சியை ஏற்படுத்திய சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை படிப்படியாக மைத்திரி ஸ்ரோ மூலம் உறுஞ்சிக்;; கொண்டிருக்கின்றார்
கடந்த ஆட்சியில் முஸ்லிம் தலைமைகளால் தலைமையேற்ற அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை,பொத்துவில்,நிந்தவூர்,ஆகிய பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் தயா கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களினால் 27.01.2016 திகதி கையொப்பமிட்டு அணைத்து பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் எதிர்வரும் 24.02.2016 திகதி நடாத்துவதற்கு பிரதியமைச்சர் பைஸல் காசிமினால் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் குறித்த திகதியில் கூட்டத்தை நடாத்த முடியாமல் அமைச்சர் தயா கமகேயின் அனுமதிக்காக பிரதேச செயலகம் காத்துக் கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளுர் பிரதேச முக்கியஸ்தரிடம் கேட்ட போது பைஸல் காசிமினால் மாத்திரமல்ல ரவூப் ஹக்கிமாலும் இது தொடர்பாக எதுவுமே செய்ய முடியாது இவர்களின் மூக்கை எங்களின் தலைவர் வெட்டி விட்டார் எங்களின் நேரத்துக்காக அவர்கள் காத்திருக்க வேண்டுமென அவர் கருத்துத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment