(ஊடக பிரிவு)
வன்னி மாவட்ட அகதி மக்களோடு நேரடியாக நின்று, அந்த மக்களின் வாழ்வியல் பணிகளுக்கு தோலோடு தோல் நின்று உதவியவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார், பட்டிருப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதியுதவியுடன் முன்பள்ளிப் பாடசாலை ஒன்றை திறந்து வைக்கும் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளில் ஒருவராகப் பங்கேற்று உரையாற்றிய போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,
அமைச்சர் றிசாத் பதியுதீன் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது மூன்றரை வருடங்கள் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அந்த மாவட்டத்தில் பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் நாங்கள் நிர்வாகப் பணிகளை நடத்திக்கொண்டிருந்த போது அவற்றை இலகுவாக்கித் தந்தவர். இந்த மாவட்டத்தில் நான் பணியாற்ற வந்த பின்னர் முதன் முதலாக இந்த வைபவத்தில் அவரைச் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.
இந்த நிகழ்வில் பட்டிருப்பு கிராம அபிவிருத்தி சங்கச் செயலாளர் உரையாற்றிய போது, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு சக்திமிக்க அமைச்சராக இருப்பதை நாம் அறிவோம். இந்த கிராமத்தை ஒரு நகரசபையாக மாற்ற வேண்டும் எனவும, பின்தங்கிய எமது கிராமத்துக்கு மேலும் உதவ வேண்டுமெனவும் அவர் கூறினார். அத்துடன் பிரதி அமைச்சர் அமீர் அலி எமது மக்களுடன் நெருங்கிப் பணியாற்றி வருபவர். இந்த முன்பள்ளிக் கட்டிடம் அவரின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment