-ஏறாவூர் சதகதுல்லா
முஸ்லிம் காங்கிரஸின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை தலைவர்களான ஹஸனலியும் பஷீர் சேகுதாவூத்தும் அந்தக் கட்சிக்குள் சரணாகதி அரசியல் நடத்துகின்றனர் என்பது, அவர்கள் பாலமுனை மாநாட்டை ஒட்டி வெளியிட்டுள்ள தனித் தனியான அறிக்கைகள் மூலம் புலப்படுகின்றது.
சாய்ந்தமருதுக்கு
தனியான பிரதேச சபை வழங்கப்படுவது ஐ நா வுக்குச் செல்ல வேண்டிய விடயமல்லவென்றும் அது
உள்ளூராட்சி அமைச்சரால் செய்யப்பட வேண்டிய ஒரு விடயமென்றும் அறிக்கை ஒன்ரின் மூலம்
தெரிவித்துள்ள ஹஸனலி பாலமுனை மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் இதனை மீண்டும் மீண்டும்
தீர்மானமாக நிறைவேற்றிக் கொண்டிருக்காமல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை சரிவர
செய்து கொடுக்க வேண்டுமென சுட்டிக்கிக்காட்டியுள்ளார்.
இதே போன்று கடந்த
வாரம் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் அரசியல் தீர்வு முயற்சிகள் மற்றும் இன்னோரன்ன அரசியல் உரிமைகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின்
தவிசாளர் நாயகம் விடுத்திருந்த அறிக்கையொன்று தேசியப்பத்திரிகைகளில் முழுப்பக்கத்தை
விழுங்கியிருந்தது. இந்த விடயங்கள் பாலமுனை மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப் படவேண்டுமெனவும்
பஷீர் வலியுறுத்தியிருந்தார்.
தனது கட்சியின்
தலைவருடன் நேரடியாகக் கதைத்து இந்த விடயங்களை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டுமென்று கூறும்
திராணியற்ற தவிசாளரும் செயலாளரும் ”பொன்னத்தனமான” அறிக்கைகள் மூலம் ஊடகங்கள் வாயிலாக
இந்த விடயங்களை எத்திவைக்கும் அளவுக்கு தலைவரின் சர்வதிகாரம் ஓங்கியுள்ளது.
மைத்திரிக்கு ஆதரவளிக்க
வேண்டுமென மகிந்தவிடமிருந்து ஹக்கீமை களட்டியெடுத்த ஹஸனலிக்குக் கூட ஹக்கீம் நன்றிக்கடன்
செலுத்தவில்லை.
நோர்வே சாமாதானப்
பேச்சுக்கு சென்றிருந்த ஹக்கீமின் தலைமைக்கு அபத்து வந்தபோது ஆபாத் பாந்தபராக கை கொடுத்தவர்
இந்த பஷீரே!
குமாரிக் குரே
விவகாரத்தில் ஹக்கீமை தப்பிக்க வைப்பதற்காக “சண்டே லீடர்” ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவிடம்
சென்று பல்வேறு காரியங்களை செய்தவரும் இந்தப் பஷீர் தான். ஆனால் ஹக்கீம் இந்த நன்றிகளை
எல்லாம் மறந்துவிட்டார்.
பாலமுனை மாநாட்டில்
தவிசாளரும், செயலாளர் நாயகமும் கலந்து கொள்ளப்போவதாக விடுத்துள்ள அறிக்கைகள் கூட அவர்களின்
மண்டியிட்ட அரசியலையே தெளிவாகப் புலப்படுத்துகிறது.
0 கருத்துகள்:
Post a Comment