ரிஷாட்டுக்கெதிரான நாலாம் கட்ட சதி முயற்சிக்கு அடித்தளம், மு கா தலைவர் ஹக்கீமுடன் இணைந்து குவைதிர் கான் மீண்டும் அரங்கேற்றுகிறார்…

-மன்னார் ஜவாத்

கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாக...... முஸ்லிம் காங்கிரஸ்காரன் என தன்னை அறிமுகப்படுத்தும் குவைதிர் கானின் நிலையும் இதுவாகத்தான் இருக்கின்றது.

குவைதிர் கான் மன்னார் கீரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கீரி எனும் கிராமம் மன்னாரிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது. குவைதிர் கான் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கற்றவர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இவர் சித்தி பெறாததால் படிப்புக்கு முழுக்குப் போட்டு வெட்டியாகத் திரிந்தவர். கபடத்தனமும், கள்ளத்தனமும் இவரின் இரத்தத்தில் ஊறியதினால், கள்ளக் கும்பல் ஒன்றின் தலைவரானார்.

1986 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இன்னும் ஒரு சில கேடிகளுடன் இணைந்து மன்னார் பெரிய கடையில், சித்தி விநாயகர் நகை மாளிகையில் கொள்ளை அடித்தவர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாகனம் ஒன்றின் சில்லுக்குள் வைத்தே கொழும்புக்கு கொண்டுவந்தவர். அந்தக் கொள்ளையை பார்த்த ஒருவரை தீ வைத்துக் கொன்று விட்டு தாழ்வுபாட்டில் இரவோடிரவாக பிரேதத்தைக் கொண்டு சென்று எரித்தவர்.

இவர் திருமணம் செய்து சரியாக 15 நாட்களின் பின்னர் கொழும்பில் வைத்து பொலிசாரிடம் அகப்பட்டதனால் வெலிக்கடைச் சிறைச்சாலையில் சுமார் 06 மாதங்களாக ஜெயிலில் இருந்தவர். பின்னர் நீர்கொழும்பு கொச்சிக் கடையில் கொள்ளையடித்து வாக்குப் போக்காக மாட்டி சிறைக்கம்பி எண்ணியவர். இவர் ஒரு பயங்கரக் கள்ளன். சொந்தத் தொழில் எதுவுமில்லை. கொள்ளையும், ஏமாற்றிக் காசு பிடுங்குவதும்தான் இவரது பிழைப்பு. இனிமையாகக் கதைத்து மற்றவர்களை ஏமாற்றும் பலே கில்லாடி. சமூகத்துக்காக போராடுவதாக தத்துவங்கள் பேசுவார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை தனது வலைக்குள் போட்டு கடந்த மாகாண சபைத் தேர்தலில் இவர் மு கா வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இவர் எடுத்த வாக்குகள் ஆக 570 மட்டுமே.

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக இலட்சக் கணக்கில் பணம் கறந்து, இடையில் மலேசியா, பேங்கொக் போன்ற நாடுகளில் அவர்களை அந்தரிக்க விட்டிடுவார். பேங்கொக்கிலும் சிறையில் இருந்த அனுபவம் இவருக்கு உண்டு. கொழும்பில் டிரவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவரிடம் ஏமாற்றிப் பெற்ற பத்து இலட்சம் தொடர்பான வழக்கு இன்னும் மாளிகாகந்தை நீதிமன்றத்தில் உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவிடம் டிக்கட் பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றிப் பெற்ற பணமே அது. அந்த வழக்கின் இலக்கம் 42090. அந்த வழக்கு தொடர்ந்து இன்னும் நடைபெறுகிறது.  
இவ்வாறா பலே கில்லாடி ஒருவரை கட்சியில் அரவணைத்து அவருக்கு புகலிடம் வழங்கி வருகிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்.

இந்தக் குவைதிர் கான் தனது வாழ்க்கையில் ஏமாற்றிப் பிழைத்ததைத் தவிர எந்தத் தொழிலும் இல்லாதவர். அமைச்சர் ரிசாட்டை வீழ்த்துவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் இவரை கோடரிக்காம்பாக பயன்படுத்தி வருகின்றது. சரிந்து கொண்டிருக்கும் மரத்தை தூக்கி நிறுத்துவதற்குப் பதிலாக தனக்குச் சமானமாக வளர்ந்து கொண்டிருக்கும் இன்னுமொரு விருட்சத்தை வெட்டி வீழ்த்தினால் தனது சரிவை மறைத்துக் கொள்ளலாம் என பகற்கனவு காண்கின்றது முஸ்லிம் காங்கிரஸ் தலைமை.

கடந்த பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு ஒரு சில வாரங்களுக்கு குவைதிர்கான் முஸ்லிம் காங்கிரஸின் பின்புலத்தில் ரிஷாட்டுக்கெதிரான தனது முதலாவது சதிமுயற்சியை ஆரம்பித்தார். ரிஷாட் தொடர்பான பொய்யான போலி ஆவணங்களை தயாரித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவருக்கெதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். அந்த முயற்சியில் அவர் இற்றை வரை வெற்றி பெறவில்லை. எந்தவொரு விசாரணைக்கும் ரிஷாட் இதுவரையில் அழைக்கப்படவுமில்லையென்பதை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.

அடுத்த கட்டமாக இரண்டாவது சதி முயற்சி ஹக்கீமின் பின் புலத்தில் மீண்டும் நடத்தப்பட்டது. வடமேல் மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷாவை குவைதிர்கானுடன் துணைக்கு அனுப்பி கொழும்பு நட்சத்திர ஹோட்டலொன்றில் ரிஷாட்டுக் கெதிரான ஊடகவியலாளர் மாநாடொன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஏற்பாடு செய்யப்பட்டது. முழுக்க முழுக்க அப்பட்டமான, சோடிக்கப்பட்ட, பொய்யான ஆவணங்களை கோவைப்படுத்தி ரிஷாட் மீதான ஊழல் குற்றச்சாட்டு என்ற போர்வையில் ஊடகவியலாளரின் பார்வையை அவருக்கெதிராக திருப்பினர். தேர்தலில் ரிஷாட்டை தோற்கடிக்கச் செய்ய வேண்டுமென்பதே அவர்களின் ஒரே இலக்காக இருந்தது. மன்னார் பொது நூலக முன்றலில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மு கா தலைவர் “ரிஷாட்டை வீட்டுக்கு அனுப்புவோம்” என “வெண்ட கோழி கூவுகின்றார்”. பார்சல்களையும் காசையும் கொடுத்து வெலியோயாவிலிருந்து கொண்டு வந்த சிங்கள மக்களையும் நூலக முன்றலில் திரளாக காட்டி வீராப்புப் பேசினார்.

எனினும் ரிஷாட் அமோக வாக்குகளால் வெற்றி பெற மு கா வன்னியில் மண் கவ்வும் நிலையே ஏற்பட்டது. மு கா ஆரம்பித்த காலம் முதல் மன்னாருக்கு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பாராளுமன்றத்திற்கு பிரதிநிதியையும், பிரதிநிதிகளையும் அனுப்பி வந்த மன்னார் மக்கள் ஹக்கிமுக்கு நல்ல பாடம் படிப்பித்து மூக்குடைத்தனர். வன்னி மாவட்ட மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் சரித்திரத்தை இல்லாமலாக்கிய பெருமை இந்த ஹக்கீமையே சாரும்.

இத்தனைக்கும் மேலாக கொழும்பு ஊடகவியலாளர் மாநாட்டில் ரிஷாட்டுக்கு சேறு பூசியதற்கு பிரதியுபகாரமாக தெகிவளையில் 40/11, ஜய சமகி மாவத்தை, களுபோவில என்ற விலாசத்தில் ரூபா 50000 பெறுமதியான வீடொன்றை குவைதிர்கானுக்கு மு கா பெற்றுக்கொடுத்தது.
   தெகிவளையில் ஊரான் வீட்டில் கொள்ளையடித்த பணத்தில் சுகபோக வாழ்க்கையை நடத்தும் குவைதிர்கான் தனது நடவடிக்கைகளை இத்துடன்  நிறுத்திக் கொள்ளவில்லை.

அவர் மூன்றாம் கட்ட சதி முயற்சியை ஆரம்பிக்கின்றார். ஹிரு தொலைக்காட்சியில் வில்பத்து – வடபுல முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பான ஆனந்த சாகர தேரோ – ரிஷாட் விவாதத்தின் போது அமைச்சர் ரிஷாட் தொடர்பான போலி ஆவணங்களை தேரருக்கு சமர்ப்பித்தவரும் இந்த கீரி - குவைதிர் கானே! நட்சத்திர ஹோட்டலில் எந்த ஆவணங்களை அவர் ஊடகவியலாளரிடம் காட்டினாரோ அதே ஆவணங்களையே ஆனந்த சாகர தேரரும்  தொலைக்காட்சி விவாதத்தில் காட்டினாரென்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல புனித குர் ஆனை தடை செய்ய வேண்டுமென்று கொக்கரிக்கும் இனவாதக் கூட்டத்தைச் சேர்ந்த அந்த தேரருக்கு அதே குர் ஆனைக் கொடுத்து ”ரிஷாட்டிடம் சத்தியம் கேளுங்கள்” என்று சொல்லிக் கொடுத்தவரும் இந்த குப்பார் குவைதிர்கானே! தேரர் தனது விவாதத்தின் போது ”இவ்வாறான ஆவணங்களை உங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களே தந்தார்கள்” என்று பட்டவர்த்தனமாக தெரிவித்தமை குவைதிர்கான் எந்தளவு இந்த சம்பவத்துடன் ஊடுருவி இருக்கின்றார் என்பதை நமக்குப் புலப்படுத்துகின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் நீண்டகால விசுவாசியாக தன்னை இனங்காட்டி வரும் இவருடன் மு கா தலைவர் மிகவும் நெருக்கமான உறவை வைத்துள்ளார். தனது அரசியல் வைரியான ரிஷாட்டை அழிப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்துள்ள மிகச்சிறந்த கோடரிக் காம்பு இந்த குவைதிர் கானே.

பாலமுனை மாநாட்டில் தான் கண்ட தோல்வியை சரி செய்வதற்காக முஸ்லிம் சமூகத்தை வேறு வழியில் திருப்புவதற்காக மு கா தலைவர் பாடாய்ப்பாடு படுகின்றார். அதன் முயற்சிகளில் ஒன்றாக மீண்டும் குவைதிர் கானை பயன்படுத்தி ரிஷாட்டுக்கெதிராக நிதிக்குற்றப்புலனாய்வில் மீண்டும் முறைப்பாடு செய்யும் நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறார். இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நான்காம் கட்ட சதி முயற்சியாவது வெற்றி பெற வேண்டுமென அவர் இறை பிரார்தனைகளில் ஈடுபடுவதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.


ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலேயே அழிவான் என்பது போல ஹக்கீமின் அழிவு குவைதிர்கானேலேயே என்பது மட்டும் உண்மையானது. ஏனெனில் இதே ஹக்கீமுக்கு எதிராக சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் குவைதிர் கான் அடித்த துண்டுப்பிரசுரம் புத்தளம் அகதி முகாம்களிலே முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான தொண்டர்களாக இருந்து மு கா தலைவரின் செயற்பாடுகளால் மனம் நொந்து போயிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அடிமட்ட போராளிகளால் இன்னுமே பாதுகாக்கப் படுகின்றது. இந்தத் துண்டுப்பிரசுரம் வெகுவிரைவில் அம்பலத்துக்கு வரும்.
Share on Google Plus

About Marupakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment