தென் மாகாண சபை அமைச்சர் டி.வி.உப்புல் தம்மை தாக்கியதாக லுணுகம்வெஹெர மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளானவர் திஸ்ஸமஹாராம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தெபரவௌ ஜனாதிபதி வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நடமாடும் சேவையொன்றின் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் பிரதியமைச்சர் ரோஹன திசாநாயக்கவின் முன்னாள் செயலாளர் நிஸாந்த டயஸ் பண்டாரநாயக்கவும் நேற்று முன்தினம் தாக்குதலுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹன திசாநாயக்கவின் சகோதரரான மத்திய மாகாண சபை உறுப்பினர் பராக்கிரம திசாநாயக்கவினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் செயலாளர், ஜீப் ரக வாகனமொன்றில் நேற்று மாலை பயணித்துக் கொண்டிருந்த போது, மாத்தளை – நாகொல்ல பிரதேசத்தில் வீதியில் மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான அவர் மாத்தளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
Post a Comment