ஹரீஸின் கதை இது
தான் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
ஹரீஸ் பிரதியமைச்சர் பதவி கிடைத்த பின்னர் பித்துப் பிடித்து அலைகிறார். தான் போகும்
கூட்டங்களிலெல்லாம் “ரிஷாட் பதியுதீன் எம் பியாக இருப்பதற்கு தனது தலைவர் ஹக்கீம் தான்
மூல காரணமென்று” மனப்பாடமாக்கிய வசனங்களை மீண்டும் மீண்டும் உளறுகிறார். தொகுதி வாரிப்
பிரதிநிதித்துவம் கொண்டு வந்ததை தடுத்ததே தனது தலைவரென்றும் அவ்வாறு தடுத்திருக்காவிட்டால்
வன்னியில் ரிஷாட் வென்றிருக்கமாட்டாரென கதையளந்திருக்கிறார்.
சட்டத்தரணியான
ஹரீஸுக்கு அரசியலமைப்பின் அடிப்படை கூட விளங்காமலிருப்பது கவலையானது. இலங்கையின் அரசியலமைப்பு
1978 ஆம் ஆண்டு ஜே ஆரினால் கொண்டுவரப்பட்ட போது விகிதாசாரப் பிரநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜே ஆர் 5/6 அரிதிப்பெரும்பாண்மை
கொண்டிருந்ததனால் தான் விரும்பியவாரு அரசியலமைப்பை மாற்றினார். 2/3 பெரும்பாண்மை இல்லாமல்
ஒரு அரசியலமைப்பை மாற்ற முடியாதென்றும் பல்வேறு படிமுறைகளைத்தாண்டியே அரசியலமைப்பு,
தேர்தல் முறை மாற்றம் இடம்பெற முடியுமென்றும் சட்டம் தெரியாத சட்டத்தரணி ஹரீஸுக்கு
இனியாவது புரிய வேண்டும்.
18 ஆவது திருத்தத்தை
ஹரீஸும் ஹரீஸின் தலைவரும் கண்மூடித்தனமாக ஆதரித்து மகிந்தவின் சர்வதிகார ஆட்சியை பலப்படுத்தியதையும்
மாநாடு நடைபெறும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் எண்ணிப்பார்க்கின்றது.
ஹரீஸ் போன்றவர்கள்
ஹக்கீமுக்கு வக்காலத்து வாங்குவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கும் போது மடைத்தனமான கருத்துக்களை
பரப்புவது அரசியல் வங்குரோத்துத்தனத்தையே எடுத்துக் காட்டுகின்றது. இதற்காகத் தான்
“காணாத நாய்க்கு கரிச்சோறு நெய்ச்சோறு” என்று கூறுகிறரார்கள்.
0 கருத்துகள்:
Post a Comment