-முஹம்மட் நிப்ராஸ்
ஏமாற்றிப் பிழைக்கும் தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலையும்
செய்யாது வெட்டியாக இருந்து கொண்டு கொழும்பில் குபேர வாழ்க்கை வாழும் மன்னார்
கீரியைச் சேர்ந்த குவைதிர் கான், அமைச்சர் ரிஷாட்டை இல்லாமல் செய்ய எடுத்த அத்தனை
முயற்சிகளும் விரயமாகிய நிலையில் தற்போது மீண்டும் புதிதாக அவருக்கெதிரான
சதிமுயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாட் மீது கொண்ட காழ்ப்புணர்வை
கொட்டித்தீர்ப்பதற்கு வழி தேடித்திரிந்த குவைதிர்கானுக்கு கிடைத்த சிறந்த வடிகான்,
நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமே. மு கா தலைவருக்கும் இவ்வாறான
ஒரு குப்பை குவைதிர்கானே ரிஷாட்டை வீழ்த்துவதற்கு தேவையாயிருந்தது.
மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் தலைமைப் பதவியை
தட்டிப்பறித்த ரவூப் ஹக்கீம், அஷ்ரப்பின் சிறந்த அடித்தளத்தில் உருவாகிய அந்தக்
கட்சியின் தலைவனாக தான் இருப்பதால் ஒரு போதும் தன்னை அசைக்க முடியாதென்றே
எண்ணியிருந்தார்.
தனக்குச் சவாலாக இன்னொருவர் உருவாகுவார் என்று மரக்கட்சித் தலைவர்
ஹக்கீம் ஒருபோதுமே கனவிலும் நினைத்திருக்கவில்லை.
”சாரதியும் நானே, நடத்துனரும் நானே” என்ற இறுமாப்பிலும்
அகங்காரத்திலும் இருந்து வந்த ஹக்கீமுக்கு ரிஷாட்டின் எழுச்சி தலையிடியாக மாறியது.
ரிஷாட் முஸ்லிம் காங்கிரஸ் கோட்டைக்குள் புகுந்து 33000 வாக்குகளை பெற்றமையும் அம்பாறை
முஸ்லிம் புத்தி ஜீவிகள் சாரை சாரையாக மக்கள் காங்கிரசில் இணைந்து வருவதும்
ஹக்கீமை நிலை குலையச் செய்துள்ளது.
பாலமுனை மாநாட்டில் அவர் கண்ட தோல்விகளாலும் அதன் பின்னர்
தனது கட்சிக்குள் அவருக்கெதிராக எழுந்துள்ள நெருக்கடிகளாலும் அவர் மிகவும் நொந்துபோயுள்ளார்.
அமைச்சர் ரிஷாட்டின் அண்மைய அம்பாறை விஜயத்தால் அந்த
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும் ஹக்கீமை மீண்டும் திணறச் செய்துள்ளதால்
அவற்றை மூடி மறைக்கும் வகையில் ரிஷாட்டை அழிக்கும் அஸ்திரத்தை புதிதாக
கையிலெடுத்துள்ளார். அதற்கு குவைதிர்கான் என்ற புல்லுருவியை பயன்படுத்தி
வருகிறார்.
அமைச்சர் ரிஷாட் மீது இல்லாத பொல்லாத விடயங்களை தனது
சகோதரன் ரவூப் ஹஸீரின் உதவியுடன் எழுதி குவைதிர்கானின் பெயரில் அரசியல்
முக்கியஸ்தர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் அனுப்பி வருகிறார். அஷ்ரப்பை போல்
ஹக்கீமையும் கவிஞர் என்ற மாயையை உருவாக்குவதற்காக ஹக்கீமுக்குக் கவிதை
எழுதிக்கொடுப்பவரும் இந்த ஹஸீரே! அதே போன்றே குவைதிர்கானுடன் இணைந்து ரிஷாட்டைப்
பற்றி கேவலமாக எழுதி குவைதிர்கானின் பெயரில் விநியோகித்து வருகின்றது இந்த சதிகாரக்
கும்பல். அமைச்சர் ரிஷாட்டை கேவலப்படுத்துவது தான் இவர்களின் உச்சக்கட்ட இலக்கு.
ஏற்கனவே குவைதிர்கானுடன் இணைந்து இந்த சதிகாரக்கூட்டம்
அமைச்சர் ரிஷாட்டுக்கெதிராக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு ஒரு சில வாரங்களுக்கு
முன்னர் குவைதிர்கான் முஸ்லிம் காங்கிரஸின் பின்புலத்தில் ரிஷாட்டுக்கெதிரான தனது
முதலாவது சதிமுயற்சியை ஆரம்பித்தார். ரிஷாட் தொடர்பான பொய்யான போலி ஆவணங்களை
தயாரித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவருக்கெதிராக ஊழல்
குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.
அடுத்த கட்ட சதி முயற்சி ஹக்கீமின் பின் புலத்தில் மீண்டும்
நடத்தப்பட்டது. வடமேல் மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி
ஜவஹர்ஷாவை குவைதிர்கானுடன் துணைக்கு அனுப்பி கொழும்பு நட்சத்திர ஹோட்டலொன்றில்
ரிஷாட்டுக் கெதிரான ஊடகவியலாளர் மாநாடொன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் ஏற்பாடு
செய்யப்பட்டது. முழுக்க முழுக்க அப்பட்டமான, சோடிக்கப்பட்ட, பொய்யான ஆவணங்களை
கோவைப்படுத்தி ரிஷாட் மீதான ஊழல் குற்றச்சாட்டு என்ற போர்வையில் ஊடகவியலாளரின் பார்வையை
அவருக்கெதிராக திருப்பினார்.
அவர் மூன்றாம் கட்ட சதி முயற்சியை ஆரம்பிக்கின்றார். ஹிரு
தொலைக்காட்சியில் வில்பத்து – வடபுல முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பான ஆனந்த சாகர
தேரோ – ரிஷாட் விவாதத்தின் போது அமைச்சர் ரிஷாட் தொடர்பான போலி ஆவணங்களை தேரருக்கு
சமர்ப்பித்தவரும் இந்தக் குவைதிர்கானே!
எந்தவகையிலாவது ரிஷாட்டை வீழ்த்தி மக்கள் காங்கிரஸை
அழிப்பதே மரக்கட்சித் தலைவரினதும் மரமண்டைக் குவைதிர்கானினதும் நோக்கமாக
இருக்கின்றது. இவர்கள் என்ன சதி செய்தாலும் இறைவன் இந்த சதிகாரர்களுக்கு நல்ல
பாடத்தை படிப்பிப்பான் என்பதே உண்மை.
0 கருத்துகள்:
Post a Comment