எதிர் நீச்சலே என் வாழ்க்கையாகி விட்டது. இறைவனின் உதவியிருப்பதாலேயே மக்கள் பணியை தொடர முடிகிறது. - தம்பட்ட முசலிக்கட்டுவில் றிசாத்

MNM FARWISH

எனது அரசியல் வாழ்வில் எத்தனையோ தடைகளையும் சவால்களையும் நான் தொடர்ந்தும் சந்தித்து வருகின்ற போதும் இறைவனின் அருளும் மக்களின் ஆதரவும் தொடர்ந்து இருப்பதனால் மக்கள் பணிகளை தொடர்ந்தும் செவ்வனே ஆற்ற முடிகின்றதென்று நேற்று (18/02/2016) அமைச்சர் றிசாட் தெரிவித்தார். 

மன்னார், சிலாவத்துறை தம்பட்டு முசலிக்கட்டுவில் மீளக்குடியேறியுள்ள மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். 

பிறந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு உங்களைப்போன்றே அகதி முகாமில் வாழ்ந்தவன். நான் பட்ட கஷ்டங்கள் வார்த்தைகளால் கூற முடியாது. கல்வியை தொடர்ந்து கற்க வேண்டுமென்கிற ஒரே இலட்சியத்தில் நான் இருந்ததால் வறுமையின் மத்தியிலும் கல்வியிலே முன்னேற முடிந்தது. 

அகதி முகாமிலிருந்து அரசியலுக்கு வந்த காரணத்தினாலேயே உங்களுடைய கஷ்டங்களை என்னால் உணர முடிந்தது. தேர்தலுக்காக மட்டும் இந்த பிரதேசத்திறகு வந்து நான் அரசியல் நடத்துபவனல்லன். 

நமது சொந்தக்காணியில் நாம் குடியேறுவதைக்கூட பொறுக்க மாட்டாத சக்திகள் மீள்குடியேற்றத்தைத்தடுப்பதறகாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. 

நான் காட்டை அபகரித்து அதனை நாசமாக்கி காணி பெற்றுத்தருவதாக பொய்ப்பிரச்சாரங்கள் கட்டவிழ்தது விடப்பட்டுள்ளன. மீள்குடியேறிய மக்களின் காணி தொடர்பாக நாம் தற்போது ஆறு வழக்குகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். அகதி மக்களுக்கு நான் பணியாற்றுவதை பொறுக்கமாட்டாத சிலர் பல்வேறு கோணங்களில் எனக்கெதிரான அம்புகளை வீசி வருகின்றனர். 

வில்பத்துக்காட்டை நான் அழித்து 'அரபுக்கொலனி' அமைப்பதாக பெரும்பான்மை சமூகம் சார் இனவாதிகளும் சன்னார், முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் வெளியாரைக்கொண்டுவந்து நான் குடியேற்றுவதாக சிறுபான்மை சார் இனவாதிகளும்
 போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தனைக்கும் மத்தியிலே முஸ்லிம் சமூகத்திலுள்ள சில அரசியல் வங்குரோத்து சகதிகள் எனது அரசியல் எழுச்சியை பொறுக்கமாட்டாது என்னை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்ற சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தனைக்கும் மத்தியிலேதான் நான் பணியாற்ற வேண்டியுள்ளது. 

Share on Google Plus

About Marupakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment