-சம்மாந்துறை மஜீத்
அம்பாறை மாவட்ட
அபிவிருத்திக்குழுக்கூட்டத்தை கூட்டுவதற்கு மரக்கட்சி எடுத்த அத்தனை முயற்சிகளும் மண்ணாகி
விட்ட நிலையில் அம்பாறையில் மரக்கட்சி முக்கியஸ்தர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
முஸ்லிம்களின்
இதயம் அம்பாறையே என அடிக்கடி வீறாப்பு பேசும் மரக்கட்சித் தலைவர் அம்பாறையில் மூன்று முஸ்லிம்
எம் பிக்களை கொண்டுள்ள போதும், கேவலம் அந்த மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைமைப் பதவியை
எடுக்க முடியாது திண்டாடுகின்றார்.
கடந்த பொதுத்தேர்தலில்
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாகமகே தன்னந்தனி காட்டு யானையாக
நின்று மரக்கட்சிக்காரர்களை சிதிலமடையச் செய்துவருகிறார்.
அம்பாறை மாவட்ட
அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் தலைமை யாருக்கு என்ற கயிறிழுப்பு தொடர்ந்து நடந்து
வருகின்ற போதும் தயா கமகே நிழல் தலைவராக இப்போதும் பணியாற்றி வருவதுடன் அவரது பிடி
தற்போது மேலும் இறுக்கமடைந்துள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில்
தனிச்சிங்களத் தொகுதியான அம்பாறையில் ஐ தே க தோல்வியடைந்த போதும், அதே மாவட்டத்தில்
போட்டியிட்டு ஐ தே கவில் வெற்றி பெற்ற தயா கமகே மு காவுக்கு சவாலாக உருவெடுத்துள்ளார்.
இந்த இலட்சணத்தில்
தனது சொந்த மாவட்டமான அம்பாறையில் கூட கையாலாகாத தனத்தில் இருக்கும் ஹரீஸ், மன்னார்
எருக்கலம்பிட்டியில் நடந்த விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு ‘தனது தலைவர் ஹக்கீம்
சமுதாயத்தின் காவலன்’ என பிதற்றியுள்ளார், பீற்றியுமுள்ளார். தலைவர் ஹக்கீம் இல்லாவிட்டால்
கடந்த பொதுத்தேர்தலில் தொகுதி வாரி தேர்தல் முறையே வந்திருக்குமென பேயன் போல உளறியுள்ளார்.
இன்னும் சமுதாயத்தையே
ஏமாற்றி வரும் முகா எம் பிக்கள் இவ்வாறு அரசியல் பிழைப்பு நடத்துவதை கைவிட வேண்டும்.
முகா அடிவருடிகளுக்கு
நாம் ஒன்றை கூற வேண்டும், வெளிநாட்டிலிருக்கும் தயா கமகேவின் அழுத்தத்தினால் தானே கடந்த
சில தினங்களுக்கு முன்னர் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த அபிவிருத்திக்குழுக்கூட்டம்
கைவிடப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? திராணியற்ற முஸ்லிம் எம் பிக்களின் தம்பட்டங்களுக்கு
நீங்கள் சோடை போகாதீர்கள்.
0 கருத்துகள்:
Post a Comment