ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சென்ற வாரம் அம்பாரை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களுக்குச் சென்று பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.அந்த வகையில் நிந்தவூர் பிரதேசத்திற்கும் தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
ஹஸனலியின் சகோதரர் தலைமையில் அஷ்ரப் காலத்து கட்சிக்காரர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் அடங்கிய குழு நிந்தவூருக்கு வந்துள்ள அமைச்சரை சந்தித்து கட்சியின் செயலாளர் ஹஸனலி தொடர்பாக கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம் கட்சிக்கும் சமூகத்திற்கும் ஹஸனலி செய்த தியாகங்களை யாருமே மறக்க முடியாது.அந்த வகையில் ஹஸனலியை தானும் கட்சியும் ஒரு போதும் கைவிடப் போவதில்லையென்றார்.
அத்தோடு ஹஸனலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்குறிய தன்னாலான அணைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டு வருகின்றேன்.அவருக்குறிய நியமனம் மிக விரைவில் வழங்கப்படும் என வந்த குழுவிடம் அமைச்சர் தெரிவித்தார்.
தலைவரின் உறுதிமொழியைத் தொடர்ந்து கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஹஸனலியைத் தொடர்பு கொண்டு நீங்கள் அடுத்த வாரத்தில் எம்.பி ஆகின்றீர்கள் தலைவர் ஊரின் முக்கியஸ்தர்களிடம் உறுதியளித்துள்ளார் என்று சொன்னதுதான் தாமதம் ஹக்கீம் கட்சியையும் மட்டுமல்ல சமூகத்தையும் நன்கு ஏமாற்றுகிறார் என்று கெட்ட வார்த்தைகளால் தனது ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார்.
செயலாளரின் இந்த நடவடிக்கையை அந்த உயா்பீட உறுப்பினா் எமது செய்திச் சேவைக்கு கவலையுடன் தொிவித்தாா்.
0 கருத்துகள்:
Post a Comment