ரி-20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள அஜ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி மீண்டும் கிண்ணத்தை வெல்வதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
‘ஓரே நாடு ஓரே அணி’ என்ற தொனிப் பொருளில் இம்முறை உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணி களமிறங்கியுள்ளது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டாகும்.
இந்தியாவை நோக்கிப் புறப்பட்ட இலங்கை அணிக்கு நேரடியாக சென்று ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தமை மிகவும் வரவேற்கத்தக்க ஓன்றாகும். நல்லதொரு நிர்வாகத்தின் கீழ் இலங்கை அணி கிண்ணத்தை மீண்டும் சுவிகரிப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
ஆர் ஹசன்
0 கருத்துகள்:
Post a Comment