அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாக அங்குரார்ப்பண விழாவின் அழைப்பிதழில் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் ஹசனலி ஆகியோரின் பெயர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளமையானது கேவலமானது என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இவ்வங்குரார்ப்பண அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர்களாக பிரதியமைச்சர்களான பைசல் காசிம், ஹரீஸ் ஆகியாரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் மாகாணசபை உறுப்புனர் ஏ எல் தவத்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அழைப்பிதழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹசனலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோர் எம் பிக்களாக இல்லாத போதும் அவர்கள் கட்சிகளில் முக்கிய பதவி வகிப்பதால் அவர்களுக்கு மன உளைச்சலை குடுக்கும் வகையில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
இதன் மூலம் இரண்டு முக்கியஸ்தர்களும் கட்சியிலிருந்து தாமாக விலகுவதற்கான அழுத்தங்களை வழங்குவதே இந்த செயற்பாடுகள் வெளிக்காட்டி நிற்கின்றது என்று மு கா அதிருப்பதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment