காட்டிலுள்ள ஒரு யானைக் குட்டியை வைத்திருந்ததற்காக தேரர் ஒருவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். வில்பத்து வனத்தை அழித்து, 1000 யானைகளின் வாழ்க்கையை இல்லாமலாக்கிய அமைச்சர் ரிஷாதை தூக்கில் போட நடவடிக்கை எடுக்கவும் என ராவணா பலயவின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
தேரர்களுக்காக பேசக்கூடிய புத்தசாசன அமைச்சு இந்த நாட்டில் இல்லை. குற்றங்களைக் காட்டிக் கொடுக்கும் போது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனைக் காட்டிக் கொடுப்பவர்களைத் தண்டிப்பது அல்ல முறை எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார். (மு)
0 கருத்துகள்:
Post a Comment