-எம் எம் றாபிக் நவாஸ்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எப்போது மகிந்தவின் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறினாரோ அன்று தொட்டு பேரினவாதிகள் அவரைக் குறி வைத்து தாக்கத் தொடங்கினர்.
முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்தது விடப்பட்டிருந்த அட்டகாசங்களை கைகட்டிப்பார்த்துக் கொண்டு வாளாவிருந்த மகிந்த அரசில் குளிர் காய்ந்தனர். இந்த இனவாதிகள் மகிந்த அரசு கவிழ்வதன் மூலம் தமக்கு இருப்பிடம் இல்லாமல் போகும் என்று அச்சம் கொண்டனர்.
முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான தமது அட்டூழியங்களுக்கு மகிந்தவின் அரசு தமக்கு ஒரு கேடையமாக இருப்பதை அவர்கள் உணர்ந்ததனால் தான் புதிய ஆட்சி மாற்றத்தை அவர்கள் எதிர்த்தனர்.
36 எம்பிக்கள் மகிந்த அரசிலிருந்து வெளியேறுவதாக செய்திகள் வெளிவந்த போதும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே மைத்திரி பக்கம் இணைந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் வெளியேற்றம் அராஜக ஆட்சியின் அடுத்தடுத்த விக்கட்டுக்களை வீழ்த்தியது. மு கா தலைவர் ஹக்கீமும் வெளியேறினார்.
மைத்திருக்கு இவ்வாறான பலம் வருவதற்கு மூலகர்த்தா ரிஷாட்டே என்ற யாதார்த்தத்தை புரிந்து கொண்டதனாலேயே இன்னும் அவரை தொடர்ச்சியாக துரத்துகின்றனர். மீண்டும் மீண்டும் துரத்தி அடிக்கின்றனர்.
வில்பத்துக் காட்டை அழித்து அரபுக்கொலனி அமைப்பதாக கதையளந்தனர். நீதி மன்றத்தில் இனவாத சூழலியலாளர்களுடன் இணைந்து வழக்குத்தொடுத்தனர். அவர்களின் பருப்பு இன்னும் வேகவில்லை.
குருநாகல் கனேவெலப்பகுதியில் அவருக்கெதிரான விஷமத்தனமான துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு, எப்படியாவது அவருக்கெதிராக சிங்கள மக்களைத் தூண்ட எடுத்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.
குடு வியாபாரம், மரக்கடத்தல், சட்ட விரோத சொத்துச் சேர்ப்பு என்ற கதைகளெல்லாம் புஸ்வானமாகி இப்போது யானைக்குட்டிக்கதையுடன் வந்து முடிந்துள்ளது. அவர் ஐக்கிய தேசியக்கட்சி யானையுடன் கைகோர்த்து இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வழிவகுத்தவரே தவிர வீட்டில் வைத்து யானைக்குட்டி வளர்த்தவரல்ல.
0 கருத்துகள்:
Post a Comment