பெண்களை சரியாக வழிநடத்துபவர்கள் தாய் நாட்டையும் வழிநடத்துவார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தனது மகளிர் தின வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டிலுள்ள பெண்களை மரியாதையுடன் நடத்தும் அல்லது சரியான முறையில் நேசிக்கும் மனிதர்களே தாய் நாட்டையும் உண்மையாக நேசிப்பார்கள் வழிநடாத்துவார்கள்.
இன்றைய நாளில் உலகம் முழுவதும் பெண்கள் மகளிர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கினர் என்றாலும் எமது நாட்டில் குறிப்பாக வட கிழக்கில் பெண்கள் இந்த நாளை புறக்கணிக்கின்றார்கள். எமது நாட்டில் வயது வித்தியாசமின்றிய செயற்பாடுகளால் இவ்வாறான புறக்கணிப்புகளில் ஈடுபடும் பெண்களுக்கு ஆறுதல் கூட எம்மால் கூற முடியாதுள்ளது.
இன்றைய மகளிர் தினத்துக்கான கருப்பொருள் ‘வலுவூட்டப்பட்ட பெண்கள் – நிலையான எதிர்காலம்’ ஆகும்
இந்த கருப்பொருளினூடாக சமூகத்திற்கு வழங்கப்படும் செய்தி நிலையான அபிவிருத்திக்கு பெண்களை வலுவூட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்த கருப்பொருளினூடாக சமூகத்திற்கு வழங்கப்படும் செய்தி நிலையான அபிவிருத்திக்கு பெண்களை வலுவூட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
எம்மை தாய்மார்கள் (பெண்கள்) வயிற்றில் சுமந்ததால் நாம் இன்று சமூகத்தில் நடமாடிக் கொண்டிருக்கின்றோம் அதே போல இன்று இலங்கைத் தாய் என்ற சிறிய தீவு பொருளாதாரத்தில் பேசப்படுகிறது என்றால் முதுகில் கூடை சுமந்து தேயிலை மூலம் நாட்டின் முதுகெலும்பை உயர்த்தியதும் ஒரு காரணமாகும்.
எனவே சமூகத்தில் பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எதிர் வரும் காலங்களில் பெண்கள் மீதான கொடுமைகளுக்கான கடுமையான சட்டங்கள் அமுல் படுத்த வேண்டும்.
இந்த நல்லாட்சி அரிசில் எமது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து இலங்கையில் மேலும் பல்வேறு துறைகளிலும் பெண்களை இணைத்த வலுவான ஒரு இலங்கையை நாம் ஒன்றிணைந்து கட்டிஎழுப்புவோம். அனைத்து பெண்களுக்கும் எனது இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என அவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment