உலக பொருளாதார மாற்றங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரி திருத்தங்கள் பலவற்றை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
இதன்போது உரையாற்றிய பிரதமர் வட் வரியை 15 வீதமாக அதிகரிக்க வேண்டுமென தெரிவித்தார். எனினும் அத்தியாவசிய பொருட்கள் இந்த வரி விதிப்புக்கு உள்ளடங்குவதில்லை என மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேசத்தை கட்டியெழுப்பும் வரியில் (NBT) எந்தவித மாற்றமும் செய்யப்படுவதில்லை என பிரதமர் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment