றகர் வீரர் வசீம் தாஜுடினின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைது செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக வசீம் தாஜுடீன் வாகன விபத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், உயிரிழந்த தாஜூடீனின் பணப்பை கிருலப்பண பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தது.
வேகமாக மோதி வாகனம் வெடித்துச் சிதறியதாகவே கூறப்பட்டிருந்தது. எனினும், வாகனம் மோதுண்ட மதிலுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும், பிரதேச மக்களுக்கு இந்த விபத்தினால் ஏற்பட்ட சத்தமும் கேட்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எரியுண்ட நிலையில் இருந்த தாஜூடினின் சடலத்தை வாகனத்திலிருந்து பொலிஸார் மீட்டிருந்தனர்.
மஹிந்தவின் ஆட்சியில் இது விபத்து என்ற கோணத்திலேயே பொலிஸார் விசாரணைகளையும் முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களைத் தொடர்ந்து தாஜூடினின் மரணம் தொடர்பிலான விசாரணைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததுடன் அவருடை மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்திய பாதுகாப்பு தரப்பினர் நாமலை கைது செய்ய தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, நாமல் கைது செய்வதனை தடுக்கும் நோக்கில் முன்கூட்டியே அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ய நாமலின் உறவினர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.
எனினும் அதற்கு நாமல் ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டுள்ளார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment