MNM FARWISH
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும் கல்வி அபிவிருத்திகளுக்கு பொறுப்பானவருமான டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் குளியாப்பிட்டிய பரகஹகொட்டுவ மக்கள் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டார்.
அப்பிரதேச மக்களின் கல்வி, மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமாகவும் மக்கள் குறை நிறைகளையும் கேட்டு அறிந்து கொண்ட டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் இவ்விடையங்களில் அக்கறை செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்
இவ்வூர் பிரச்சினைகள் விடையமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவருடன் கலந்தாலோசித்து விட்டு வேண்டிய உதவிகளை பெற்றுத்தருவதாகவும தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குளியாப்பிட்டிய பரகஹகொட்டுவ மக்கள், பள்ளி நிர்வாகத்தினர், ஊர் அபிவிருத்திக்கு பொறுப்பானவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment