எதிர் காலத்தில் சிறைச்சாலை பஸ்கள் அனைத்துக்கும் கறுப்புக்கண்ணாடி பொறுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் போது விஷேட கைதிகளை அழைத்து வரும் பஸ் வண்டிகளில் இவ்வாறு மறைப்பதற்கு அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், தெமட்டக்கொடை பகுதியில் வைத்து சிறைச்சாலை பஸ்ஸொன்றின் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதனாலேயே இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment