அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் படுகொலைகளுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டியை, நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
கேகாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்:
குற்றங்களை கட்டுப்படுத்த முறையான வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த சில தினங்களாக நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயேகங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
.
அண்மையில், பாதாள உலகக் கோஷ்டியினர் சில கொலைகளைச் செய்திருப்பதை நாம் கண்டோம். அரசாங்கம் என்ற வகையில், அவர்களை நாட்டிலிருந்து முற்றாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைளை நாம் மேற்கொள்வோம் எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
Post a Comment