”அமைச்சர் ரிஷாட் அம்பாறை மாவட்ட மக்களை
ஏமாற்றிவிட்டார்” என்று தான் கூறியதாக
சமூக வளைதளங்களிலும் முக நூல்களிலும் வெளிவந்துள்ள செய்திகளுக்கும் தனக்கும்
எந்தத் தொடர்புமில்லையெனவும் தன் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களால் திட்டமிட்டு
வேண்டுமென்றே வெளியிடப்பட்ட இந்தச் செய்தி அப்பட்டமான பொய்யென்றும்
பொதுத்தேர்தலில் மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் சிரேஷ்ட
விரிவுரையாளாருமான கலீலுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
எம்.அஷ்ராப்கான் என்ற ஊடகவியலாளரால் சில
இலத்திரனியல் ஊடகங்களில் தன்னைத்
தொடர்புபடுத்தி பதிவேற்றப்பட்ட பொய்யான
அறிக்கை பல “முஸ்லிம் காங்கிரஸ் முகப்புத்தக போராளிகளால்” அகிலஇலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான மாண்புமிகு ரிசாத் பதியுதீன் அவர்களின் அம்பாறை
விஜயத்தின்போது வேண்டுமென்றே பல சமூக வலைதளங்களில்பதிவேற்றப்பட்டது அல்லது Tagசெய்யப்பட்டது.
மேற்சொல்லப்பட்ட தலைப்பிலான அறிக்கை முற்றிலும் உண்மைக்குப்
புறம்பானதும் ஊடக தர்மத்தை மீறும் ஒரு ஈனச் செயலுமாகும் என்றும் எந்த வகையிலும்
அந்த அறிக்கைக்கும் எனக்கும் எதுவித தொடர்புமில்லை என்றும் கட்சித் தலைமைக்கும்
எனக்குமிடையில் விரிசலை ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்
என்றும் அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளரும் சிரேஷ்ட
விரிவுரையாளருமாகிய கலீலுர் ரகுமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், சென்ற
பொதுத் தேர்தலை தொடர்ந்து துரதிஷ்ட வசமாக எமது கட்சியின் தலைமைக்கும் அதன் அப்போதைய
செயலாளர் நாயகம் வை. எல். எஸ். ஹமீது அவர்களுக்கும் இடையில் தேசியப் பட்டியல்
தொடர்பான ஒரு பிணக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, அன்றைய செயலாளர் நாயகத்தின் ஊரான
கல்முனையை பிறப்பிடமாகக் கொண்டவன் என்ற அடிப்படையிலும் எமது மக்கள் காங்கிரஸ் கட்சியை
அம்பாறை மாவட்டத்தில் காலூன்றச் செய்து கல்முனை கரையோர மாவட்ட மக்களை காலா காலமாக ஏமாற்றி
வருகின்ற முஸ்லிம் பெயர் தாங்கி கட்சிக்கு மாற்றீடான அரசியல் சக்தியாக
வளர்த்தெடுக்க வேண்டுமென்ற உன்னதமான நோக்கத்துடனும், பல தியாகங்களுக்கு மத்தியில் செயற்பாட்டு
அரசியலில் களமிறங்கியவன் நான்.
அந்தஅடிப்படையில் இந்தபிணக்கினை சுமுகமாக பேசித்
தீர்க்க வேண்டுமென்ற தார்மீக பொறுப்பையும் கடப்பாட்டையும் சுமந்தவனாக அப்போதைய
செயலாளர் நாயகம் வை. எல். எஸ். ஹமீதின் தீவிர ஆதரவாளர்கள் மூவரும் எனது ஆதரவாளர்களுமாக
கட்சியின் தலைவர் கௌரவ அமைச்சர் ரிசாத் பதயுதீன் அவர்களை அவரது வேலைப் பளுக்களுக்கும்
மத்தியில் அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் அதிகாலை ஐந்து மணி வரை பேசினேன்.
அந்த வேளையில் “கட்சியிலிருந்து தலைவரை செயலாளர்
நீக்கினார்” என்ற வினோதமான அறிக்கை தொடர்பாக தனது கோபத்தையும் வருத்தத்தையும்
வெளிப்படுத்திய தலைவர் சுமார் மூன்று லட்சம் மக்கள் வாக்களித்த அமானித தலைமையினை அவமதிக்கும்
இந்த அறிக்கையை உடனே வாபஸ் பெறவேண்டுமென்றும் அதனை தொடர்ந்து பேசமுடியும் என்றும்
வழமையான தனது நெகிழ்வு தன்மையுடன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் அன்றைய தினம் காலையில்
கிங்க்ஸ்பரி ஹோட்டலில் கட்சித்தலைமையால் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்ட
பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அன்றைய செயலாளர் அவர்களை எப்படியும் அழைத்து வருவதாக வாக்களித்து
விட்டுச் சென்ற அவரது ஆதரவாளர்களினதும் அன்றைய செயலாளரினதும் தொலைபேசிகள்
கிங்க்ஸ்பரி பத்திரிகையாளர் மாநாடு முடியும்வரை நிறுத்தப் பட்டிருந்தமை என்னை
அதிர்ச்சிக்கு உள்ளாகியது மட்டுமல்லாது எனது இணக்கப்பாட்டுக்கான முயற்சியையும்
கொச்சைப் படுத்தியது..
இறை தூய்மயுடனான எண்ணப்பாட்டுடன் கட்சியின்
ஒற்றுமையை பாதுகாக்க வேண்டுமென்ற எனது முன்னெடுப்பு தோல்வி கண்டு விடுமா என்ற கவலையுடன்
மாநாட்டில் கலந்துகொண்டேன். மாநாடும் நடந்தது.
“கட்சியிலிருந்து
செயலாளர் நீக்கப்பட்டார்” என்ற அறிவிப்போடு மாநாட்டை முடித்த கையோடு கட்சியின் தலைவர்
மீண்டுமொரு முறை அவரது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார். அன்றைய செயலாளர் விடுத்ததாக
சொல்லப்பட்டஅறிக்கையை வாபஸ் பெறுமிடத்து தொடர்ந்து பேச முடியும் என்றும் இந்த
செய்தியை அவரிடம் எத்தி வையுங்கள் என்றும் சொன்னதற்கிணங்க, முன்னாள் செயலாளர்
வீட்டுக்கு விரைந்து சென்று அவரை சந்தித்து, அவர் காரசாரமாக வேறு விதமான ஒரு
அறிக்கைக்கு தன்னைத்
தயாராக்கிக் கொண்டு இருந்த வேளையில், கட்சி
தலைமையின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி தனது அறிக்கைக்கு மறுப்பறிக்கை விடுக்குமாறு
கேட்டுக்கொண்டதோடு ஒரு இணைக்கப் பாட்டுக்கு வந்து பொறுமையுடன் கட்சியை
வளர்த்தெடுக்க எல்லோருமாக பாடுபடுவோம் என்றும் வினையமாக கேட்டுக் கொண்டேன்.
தலைமையின் நல்லெண்ணத்தை ஏற்றுக்கொண்டு எனது
முன்னிலையிலேயே மறுப்பு அறிக்கை ஒன்றினை அன்றைய செயலாளர் விடுத்ததை தொடர்ந்து மன மகிழ்ச்சியுடன்
கட்சி காரியாலயத்திற்கு விரைந்து சென்று அன்று பிற்பகல் வேறு ஒரு கூட்டத்திற்காக கூடியிருந்த
கட்சி தலைமையிடமும் தவிசாளரிடமும் என்னால் பதிவு செய்யப்பட்ட அந்த மறுப்பு அறிக்கையின்
காணொளியை காட்டி விட்டு ஒரு நல்ல தீர்வு எட்டப்படும் என்ற எண்ணத்தோடு எனது சமாதானப்பணியை
முடித்துக் கொண்டேன்.
அதனை தொடந்து பல தனிநபர்களும், குழுக்களும் என்று
தலைமைக்கும் அன்றைய செயலாளருக்கும் இடையில் ஒரு சுமுகமான தீர்வுக்காக பாடுபட்ட
போதும் கூட, பேச்சுவார்த்தைகளை செய்தும்கூட பிடிவாதத்தனமான அன்றைய செயலாளரின்
போக்குகள் ஒரு இணைக்கப் பாட்டை மறுதலித்து இன்று கட்சியை நீதிமன்றம்வரை கொண்டு
சென்றுள்ளது யாவரும் அறிந்த விடயம்.
இது இவ்வாறு இருக்க, கட்சி தலைமையோடு அன்று
அதிகாலை நான் பேசிக் கொண்டிருந்த வேளையில் அம்பாறை மாவட்ட வேட்பாளராகிய நான்,
“அமைச்சர் ரிசாத் அம்பாறை மக்களை ஏமாற்றிவிட்டார்”, என்ற தலைப்பில் புனையப்பட்ட
பொய்யான எந்த வகையிலும் நான் தொடர்புபடாத ஓர் அறிக்கை வெளியிடப்பட்டதாக கட்சித்
தலைவர் தனது கைத்தொலைபேசியில் என்னிடம் காண்பித்தார். நான்பெரும்அதிர்சியுடன் கவலையும்
அடைந்தேன். அனால், அந்த அறிக்கை எங்கிருந்து யாரால் வெளியிடப் பட்டது என்றும் அதன்
தமிழ் பதமும் கையாளுகையும் யாருடையது என்பதையும் எனது பெயரை வைத்து வேறு ஒரு
தனிநபர் அரசியல் ஆதாயம் தேட எத்தனிக்கும் ஒரு முயற்சிதான் அது என்றும் தலைவர் நன்கு அறிந்து வைத்திருந்தார்.
இருந்தபோதிலும் அடுத்த கணமே அந்த அதிகாலையில்
அறிக்கையை
வெளியிட்ட எம். அஷ்ராப்கான் என்பவரை தொடர்புகொண்டு நான் சம்மந்தப்படாத
அறிக்கையை எப்படி நீங்கள்பதிவேற்ற முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு உடனடியாக
அதனை நீக்கி விடவேண்டுமென்றும் அதற்கான மறுப்பு அறிக்கையை உடனே வெளியிட
வேண்டுமென்றும் நான் கேட்டதற்கிணங்க ஒரு மறுப்பு அறிக்கையை தொலைபேசி மூலமாக அவர்
என்னிடமிருந்து பதிவு செய்து கொண்டார். பதிவேற்றப்பட்ட அறிக்கையை அகற்றுவதாகவும்
மறுப்பு அறிக்கையை பதிவேற்றுவதாகவும் உறுதியளித்தார். ஆனால்
அவரது கடமையை சரிவரச் செய்தாரா என்பதை கேள்விக்குள்ளாகும் வகையில் அந்த பொய்யான
அறிக்கை சில இலத்திரனியல் ஊடகங்களில் இருந்து இன்னும் அகற்றப்படாமல் இருந்திருக்கின்றது.
இந்த சூழலில், சென்ற வாரம் பல அபிவிருத்தி
திட்டங்களோடும் சதொச திறப்பு விழா நிகழ்ச்சி நிரலோடும் மக்கள் சந்திப்புக்காக அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் அவர்கள் அம்பாறை மாவட்டம் வருகை தந்தபோது
எனது அரசியல் பிரவேசத்திலும் முன்னெடுப்புகளிலும் காழ்புணர்ச்சி கொண்ட “முகப்புத்தக
போராளிகள்” கட்சிக்கும் எனக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கோடு இதுவரை சில செய்தித்
தளங்களில் இருந்து அகற்றப்படாத அந்த பொய்யான அறிக்கையை முகப்புத்தகத்தில் மீள்
பதிவேற்றம் செய்து மகிழ்சியடந்த காரணத்தினாலேயே நான் இந்த மறுப்பு அறிக்கையை
வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டேன்.
எது எவ்வாறு இருப்பினும்,தேர்தல் காலத்தில் முஸ்லிம்
காங்கிரஸ் கோட்டையான கல்முனையில், பல வலிமையான எதிரணி அரசியல் தலைமைகள்
பல்வேறுபட்ட தொல்லைகளை தந்த போதிலும் கூட, நிதானமாகவும் அற்பணிப்புடனும்
செயற்பட்டு, பல சவால்களுக்கு முகம்கொடுத்து, நாளாந்தம் வியர்வை சிந்தி உழைக்கின்ற தொழிலாளிகள்
தொடக்கம் வர்த்தகர்கள், கல்விமான்கள் என்று பலதரப்பட்ட வாக்காளர்களினதும் கணிசமான
வாக்குகளை பெற்று இந்தப் பிராந்திய அரசியல் தலைமையில் மாற்றம் ஒன்று வேண்டி அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் கீழ் போராடி வருகின்ற நாம் எதிர்காலத்திலும் எமது
இந்த போராட்டத்தை முன்னெடுத்து விஸ்தரித்துச் செல்ல பொது மக்கள் பூரண ஆதரவையு ம்வழங்க
வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
மாற்றுத் தலைமைகள்
கொண்டுவருகின்ற அபிவிருத்திகளை துரத்தியே பழக்கப் பட்ட “போராளிகள்”, தேர்தல்
காலங்களில் மட்டும் மக்களை உசுப்பேற்றி வாக்குகளை களவாடிவிட்டு கொழும்பிற்கு சென்று
தூங்கிக் கிடக்கின்ற கலாச்சாரத்தை மாற்றி, மக்கள் காங்கிரசின் வாகனப் பேரணி ஒன்று வருகின்றது
என்றால் வயிறு கலங்கிப் போய் குழப்பமடைந்து ஓடித் திரிகின்ற நிலைக்கு இப்பிராந்திய
அரசியல் தலைமைகளை மற்றியிருகின்றோம் என்பது மட்டுமல்லாது குறைந்த பட்சம் மக்கள்
காங்கிரசுடனான போட்டி தன்மையிலாவது இந்த மக்களுக்கு எதையாவது நன்மையை செய்துவிட
அவர்களை தூண்டியிருகின்றோம் என்றும் வெறும் பேச்சில் “சாணக்கிய” அரசியல்
செய்துவருகின்ற முஸ்லிம் பெயர்தாங்கி தலைமையின் மத்தியில், இன்று மக்களுக்காகவே
தனது வாழ்வை அற்பணித்துக் கொண்டு கடிகார முள்ளோடு தன்னையும் சேர்த்து நாள்
முளுதுமாக தான் சார்ந்த மக்களுக்காக போராடி சாதித்து
வென்று காட்டி வருகின்ற “செயற்பாட்டுச் சாணக்கியத்தலைமை” ரிசாத் பதியுதீன்
அவர்களின் கரங்களுக்கு மேலும் வலுச்சேர்த்து உத்தேச கல்முனை கரையோர மாவட்டம் முழுவதுமாக
அடையாளம் காணப்பட்ட அபிவிருத்திகள் அபிலாஷைகள் என்பவற்றை திட்டமிட்ட அடிப்படையில்
வினைத்திறனோடும் அற்பணிப்போடும் வென்றெடுப்பதற்காக திடசங்கற்பம் கொள்ளுமாறும், இப்பிராந்தியத்தில்
எமக்கு வாக்களித்த 33,000
நிஜப்
போராளிகளோடு கை கோர்த்து தற்போது இடம்பெற்று வருகின்ற கட்சி செயற்பாடுகளிலும்
கட்சி அங்கத்துவ விஸ்தரிப்பு பணிகளிலும் தங்களையும் இணைத்துக்கொண்டு இந்த நாட்டில்
வாழ்கின்ற இரண்டு மில்லியனையும் தாண்டிய முஸ்லிம்களின் நியாயமானஅடைவுகளை நோக்கிய “நிஜமான
போராட்டத்திற்கு” தலைமை தாங்கி வருகின்ற ரிசாத் பதியுதீன் அவர்களையும் அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் கட்சியையும் பலப்படுத்த சகல பேதங்களையும் மறந்து ஒன்றிணையுமாறு
கல்முனை கரையோர மாவட்டம் சார்ந்த அனைத்து பொது மக்களையும் இந்த சந்தர்ப்பத்தில்
கேட்டுக் கொண்டார்.
0 கருத்துகள்:
Post a Comment