ஆறு கடக்கும் மட்டும் அப்பப்பா கடந்த பின் நீ யாரப்பா? றஹ்மத், மன்சூரின் பொய் முகங்கள்.

அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக் கழகம், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர.எம்.மன்சூர் அவர்களுக்கு கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. இவர் கிழக்கு மாகாணத்தில் கபினட் அந்தஸ்துள்ள முழு அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்ட முஸ்லிம் அமைச்சர் என்ற பெருமைக்குரியவர்.
இவரது அமைச்சுப் பதவிக் காலம் எல்லாம் முடிந்த பின்னர் இவர் குவைத் நாட்டுக்கான தூதுவராக நியமனம் பெற்றுச் சென்றிருந்தார்.அவருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்;பு இருந்து வந்தது.
அவர் அங்கு சென்ற போது, தூதுவராலயத்தில் முழு உதவிகளையும் செய்வதற்கு எனது நண்பன் ஸ்டார் ராஸீக்கின் மகன் றியாஸை வேண்டிக் கொண்டேன். அவர் மர்ஹூம் ஏ.ஸீ.எஸ்.ஹமீட் அவர்களுடைய காலத்திலிருந்து சுமார் 20வருடங்களுக்கு மேல் அங்கு பணியாற்றியவர்.
தூதுவருக்கு நான் கோள் எடுப்பேன்.அவர் கோள் எடுப்பார் இப்படியே நாட்கள் நகர்ந்தன.அந்தக் காலத்தில் நான் அவருக்கு செய்த சிற்சில உதவிகளுக்காக என்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
பெருநாளொன்றுக்கு ஊருக்கு வந்தவர் என்னை அவரது வீட்டுக்குச் சாப்பாட்டுக்கு அழைத்திருந்தார். அது காலைச் சாப்பாடு. அதில் இன்னுமொருவரும் கலந்து கொண்டார்.அவரும் இவருக்குப் பிடித்தமானவர். மருதமுனையைச் சேர்ந்த காதர் மொஹீடீன் வலயக் கல்விப் பணிப்பாளர்.தூதுவர் மீண்டும் குவைத் சென்று விட்டார்.சில மாதங்களின் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட கையோடு இவரது பதவிக் காலமும் முடிவுறும் தறுவாயிலிருந்தது. திடீரென ஒரு நாள் கொழும்பு வந்;து விட்டார்.அவரது வீட்டுக்கு என்னை அழைத்தார்.காலை வேளை சந்தித்தேன். பதவி வறிதாகி விட்டதைச் சொன்னார்.
உடனே அவரது வீட்டு தொலைபேசியை எடுத்து ஒரு பிரதியமைச்சரிடம் பேச முற்பட்ட போது தம்பி இங்கிருந்து நீங்கள் பேசுவது சங்கடமாக இருக்கின்றது என்றார்.உடனே எனது மொபைல் போனில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் தொடர்பு கொண்டு சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டேன். அவர் அவரது அமைச்சுக்கு வரும்படி அழைத்தார்.கோட்டையிலுள்ள வேல்ட்டவருக்குச் சென்றேன். விடயத்தைச் சொன்னேன். றஹ்மத் மன்சூர் வாகனம் செலுத்த நானும் தூதுவரும் தான் கோட்டைக்கு வந்தோம்.நான் அமைச்சரைச் சந்தித்து விட்டு வரும் வரை அவர்கள் இருவரும் வேறு ஒரு இடத்தில் காரில் இருந்தனர்.
நேரம் உடனடியாக ஒதுக்கியாச்சு .ஹோட்டல் கலதாரி மெரிடியனுக்கு இரு தரப்பினரும் சென்றோம். நான் மன்சூர் சேர் அவர்களின் விடயத்தைக் கூறி எப்படியாவது மீண்டும் ஒரு தடவை அவரை இன்னுமொரு தவணைக் காலத்துக்கு குவைத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி அவரின் முழு ஒத்துழைப்பினையும் வேண்டினேன்.பகல் சாப்பாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் கூல் ரிங்ஸ் தரப்பட்டது. பின்னர் தூதுவரையும் அந்தப் பிரதியமைச்சரையும் தனியாக விட்டுவிட்டு அமைச்சருடன்; வந்த சாரதி,உதவியாளர் நான் எல்லோரும் வேறு ஒரு இடத்திற்கின்குச் சென்று அமர்ந்து கொண்டோம்.
பேச்சுவார்த்தை முடிந்தது.சாப்பிட்டோம். தூதுவரிடம் நான் விடைபெற்ற போது தம்பி நீங்க எங்க போற நான் காரில் விட்டுச் செல்கின்றேன் என்றார். நான் ITN நிலையத்துக்குச் செல்ல வேண்டும் பஸ்ஸில் செல்கின்றேன் என்றேன். அதை மறுத்த தூதுவர் றஹ்மத் மன்சூரிடம், மகன் ITN னுக்கு வண்டியைச் செலுத்தென்றார்.நான் அங்கு இறங்கியதும் ஸலாம் கூறி விடை பெற்றேன். அல்ஹம்துலில்லாஹ்! எனது முயற்சிக்கு அல்லாஹ் உதவி செய்தான். மக்கள் கட்சியைச் 
சேர்ந்த ஒரு முஸ்லிம் செல்ல வேண்டிய இடத்திற்கு மீண்டும் மன்சூர் சேர் இரண்டாவது தடவையாகவும் குவைத் பயணமானார்.
காலப்போக்கில் அங்கிருந்தவாறு என்னிடம் சில விடயங்களைக் கூறினார். அக்கரைப்பற்று புதுப்பள்ளிவாசல் புதிய கட்டிடத்திற்கான நிதியைப் பெற்றுத் தருவதாகவும் நிருவாகிகளுடன் கலந்து பேசுமாறும் வேண்டினார். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன். பிறகு சம்புக்களப்பு வடிச்சல் திட்டம், அது தொடர்பாகவும் பொறியியலாளர்களுடன் பேச்சுவார்த்தை மற்றும் விவசாயிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை என பல பேச்சு வார்த்தை.
இதற்கிடையில் நான் ஆயிஷா பாளிகாவின் ஆசிரியர்.என்னோடு இருந்த சகாப்தீன் மௌலவி ஒரு மத்ரஸாவுக்கான படங்களைத் தந்து உதவுமாறும், மன்சூர் சேருடன் கதைக்குமாறும் வேண்டினார்.நான் அது சம்பந்தமாக கதைத்தேன். அதனையும் கையாளுமாறு தாதுவர் என்னிடம் கூறினார்.
மேலும் சாய்ந்;தமருது ஜூம்ஆ பள்ளிவாயலின் அபிவிருத்தி பணிகளுக்கு என குவைத்திலிருந்து ஷேக்மார் சிலரை அழைத்து வந்து நினைவுக் கல்லும் நடப்பட்டதுடன் முழு நாள் நிகழ்வுகளும் நடைபெற்றன. பின்னர் இதில் எவையும: நடைபெறவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் (சாய்ந்தமருது பள்ளி நிருவாகம் தவிர) ஏனையவர்கள் என்னை மிகவும் வன்மைப்படுத்தி மனவருத்தத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் செய்தது ஒரு வகையில் சரிதான்.மன்சூர் சேரின் நட்புக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டேன்.
பின் எனக்கு ஒரு செய்தி கிடைத்தது.என்னை குவைத்துக்கு சுற்றுலாவில் அழைத்து தூதரகப் பணிகள் தொடர்பாக ஆக்கம் ஒன்றை எழுதுமாறும் மன்சூர் என்னைப் பணித்ததுடன் எனது பாஸ்போட்டின் கலர் போட்டோ கொப்பி ஒன்றை தன் மகன் றஹ்மத் மன்சூரிடம் ஒப்படைக்குமாறும் கூறினார்.மகனின் முகவரியை பெற்று மருதானையில் நான் TV நிலையங்களுக்கு கெஸட்டுகளை உரிய இடங்ககளில் ஒப்படைக்கும் ஆட்டோ றைவர் எனது நண்பன் ஹஸன் நானாவிடம் ஒப்டைத்து அதனை றஹ்மத் மன்சூரிடம் ஒப்படைக்கச் சொன்னேன். அவரும் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி சென்று கொண்டிருந்த நிலையில் றஹ்மத்துக்கு அழைப்பை ஏற்படுத்தினால் வேறு நபர்களைக் கொண்டு பேசுவதும், போதையிலிருப்பவன் போல் பேசுவது போல் மறுமுனையிலிருந்து பதில்கள் வரும்.இந்த ஏமாற்றங்களை யாரிடம் சொல்வது? இறைவனிடம் தந்தையையும் மகனையும் ஒப்புக் கொடுத்து விட்டேன்.பின் இருவரிடமும் பேசுவதில்லை. கடைசியாக கடந்த டிசம்பர் 22ஆம் திகதி அளவில் எனது ஊடக அமைப்பின சார்பாக றஹ்மதிடம் பேச வேண்டிய தேவை ஏற்பட்டது. பழசுகளை எல்லாம் மறந்து விட்டேன்.
றஹ்மதை பற்றியும் சொல்ல வேண்டும்.இவர் குவைத் போன்ற அரபு நாடுகளிலிருந்து அவரது NGO நிறுவனங்களுக்கு நிதி பெற்று அந்த நிதியைக் கொண்டு மாடுகளை அறுத்து உழ்ஹிய்யா கொடுப்பார்.அந்த நிகழ்வுகளை எல்லாம் ஒருகாலத்தில் நானே நேரடியாகச் சென்று வீடியொ பண்ணி செய்தி செனல்களுக்கு அனுப்பி இருக்கின்றேன்.

அப்படிப்பட்டவர் இப்போ அமைச்சர் ரஊப் ஹக்கீமின் இணைப்பாளராக அமைச்சில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். இவரது செயற்பாடுகள் குறித்து அங்குள்ள சிலர் விசனம் தெரிவித்துள்ள நிலையில் தம்பட்டம் அடிக்கிறதில் ஒரு குறையும் இல்லை. மன்சூர் சேருக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது குறித்து பலர் என்னிடம் வினா தொடுத்தனர்.

அரசியல் அதிகார முத்திரை கொண்ட வான் கோழி முட்டை, மலையையும் உடைக்குமல்லவா? இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் றஊப் ஹக்கீமும் நின்றார் தானே! என்னன்றி கொண்றோர்க்கும் உய்வுண்டாம். உய்வில்லை, செய்நன்றி கொண்ட மகர்க்கு. .மன்சூருக்கு இத்தனை உதவிகளையும், உபகாரங்களையும் செய்த எனக்கு அவருடைய மகன் றஹ்மத் மன்சூர் செய்த அநியாயம் அவர்களது நன்றி கெட்ட தனத்தை எடுத்தியம்புகிறது. அவர் செய்த அநியாயம் அவருக்கு நன்கு தெரிந்ததே!
இது சுந்தர காண்டம். இனி வரும் என் தொடர் பதிவுகளில் இவர்களின் மறுபக்கத்தை நாம் காணலாம்.
கலாபூஷணம் - மீரா.எஸ்.இஸ்ஸடீன்
Share on Google Plus

About Marupakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment