ஹரீஸுக்கு இது புரிந்தும் புரியாதது போல நடிக்கிறார்!!!
-அஸ்மின் சதகதுல்லா
அரசியல் தீர்வுப்
பேச்சுவார்த்தை மேசையில் சிறுபான்மையினர் சார்பாக சம்பந்தனும் ஹக்கீமுமே இருப்பார்களென்று
விளையாட்டு அமைச்சர் ஹரீஸ் கூறியுள்ளார். மறைமுகமாக ஒரு அரசியல்வாதியைச் சாடுவதற்காக
தனது காழ்ப்புணர்வின் உச்சக் கட்டத்தில் தெரிவித்திருக்கும் அவரின் கருத்து சந்தி சிரிக்க
வைக்கின்றது.
2002 – 2004 காலப்பகுதியில்
பிரதமர் ரணிலின் ஆட்சியில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது அரசுக்கும் புலிகளுக்கும்
இடையே வெளிநாடுகளில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளில்
ஓரிரு பேச்சுவார்த்தைகளை தவிர ஏனைய அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூப் ஹக்கீமே கலந்து கொண்டிருக்கின்றார். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு தீர்வுத்
திட்ட முயற்சிகளில் உருப்படியாக அவர் எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை.
பேச்சு மேசையில்
பெட்டிப் பாம்பாக அடங்கி இருந்த ஹக்கீம், அன்டன் பாலசிங்கம் போன்ற புலிகளின் தலைவர்கள்
கேட்ட கேள்விகளுக்கு விழி பிதுங்கி நின்றார்.
முஸ்லிம் சமூகத்தின்
இழப்புகள் தொடர்பான ஆவணங்கள், தரவுகள் ஏதுமின்றி தடுமாறினார். கிடைத்த சந்தர்ப்பத்தை
அவர் பயன்படுத்தவில்லை. அதே வேளை பேச்சு மேசையில் ஓரிரு சந்தர்ப்பங்களில் பங்கேற்ற
பேரியல் அஷ்ரப் சமூகம் தொடர்பான ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தமை வரலாறு.
2004 ஆம் ஆண்டு
செப்டம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற தாய்லாந்து பேச்சுவார்த்தைக்கு ஒரு கிழமைக்கு முன்னதாக
புத்தளம் நகர மண்டபத்தில் ஹக்கீம் தனது பக்கவாத்தியக்காரர்களுடன் ஒன்று கூடினார்.
மர்ஹூம்
அஷ்ரப்பின் ஞாபகார்த்த தினமான செப்டெம்பர் 16 ஆம் திகதி தாய்லாந்தில் இந்தப் பேச்சுவார்த்தை
நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர் மர்ஹூம் அஷ்ரப் கண்ட கனவுகளை தாம் நிறைவேர்றி மார்தட்டினார்.
சமூகத்திற்கு அது செய்வேன் இது செய்வேன் என்று கூறினார். இதே கூட்டத்தில் கலந்து கொண்ட
ஹரீஸும் வீராப்புப் பேசினார். ஆனால் எந்தப் பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம்களுக்கு
உரிய பயன் கிட்டவில்லை.
இதுவே யதார்த்தம்.
0 கருத்துகள்:
Post a Comment