ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு விசேட பிரதிநிதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது விஜயம் தொடர்பிலான திகதி குறித்த இறுதித் தீர்மானத்தை அரசாங்கம் வெளியிட்டதன் பின்னர் அவர்கள் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி முதல் மே மாதம் 7ஆம் திகதி வரை ஐ.நாவின் விசேட பிரதிநிதிகள் நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பிரதிநிதி மொனிகா பின்டோ (Mónica Pinto) மற்றும் சித்திரவதைகள் மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள், கொடூரமான தண்டனைகள் அல்லது இழிவான செயற்பாடுகள் குறித்த பிரிதிநிதி ஜூவான் மென்டிஸ் (Juan Méndez) ஆகியோரே விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment