தகவலறியும் உரிமை தொடர்பான சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என முன்னதாக, ஊடகங்களில் செய்திகள் வௌியிடப்பட்டன.
இந்தநிலையில், குறித்த சட்டமூலம் வடக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண சபைகளினதும் அனுமதியைப் பெற்றுள்ளதாக, கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாண சபை 11 மற்றும் 12ம் திகதிகளிலேயே அடுத்ததாக கூடவுள்ளது என குறிப்பிட்ட அவர், இதன்போது, அம் மாகாண சபையில் இந்த சட்டமூலத்தை முன்வைத்து, அதன் அனுமதியைப் பெற்றுக் கொண்டதும், அடுத்த பாராளுமன்ற அமர்வில் அதனை சமர்ப்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment