பா.திருஞானம்
புசல்லாவை, நிவ்பீகொக் தோட்டம் சப்லி பிரிவில் நேற்று (07) இரவு, இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பெயரில் 7 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தீக்கிரையாகியுள்ளதெனவும் பொருட்களின் சேத விவரம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற காமன்கூத்து வைபவத்தின் போது, இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடே இதற்கு காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:
Post a Comment